Monday, November 30, 2009

நாய்க்குட்டி

எத்தனை முறை எட்டி உதைத்தாலும்
காலை சுற்றிச் சுற்றி வருகிறது
சிறு ரொட்டித் துண்டிற்காக...

நான்

நானும் செய்துவிட்டேன்
அது தப்போ தவறோ
தெரியவில்லை...

என்னை தோண்டியும்
அறிய முடியவில்லை...

அழும் குழந்தையிடம்
இருந்து பிரிந்து செல்கிறேன்...
அதனிடம் இருந்த என்
பொருளை பறித்து செல்கிறேன்...

என்னை அறிந்தேனா,
என்னை உணர்ந்தேனா,
தெரியவில்லை....

நான் சிரித்தேன்,
நீ அழக்கூடதிருக்க....

என்னை அழ வைக்கிறேன்,
உன்னை சிரிக்க வைக்க....

உன்னை சுமந்ததால்
நான் உனக்கு தாயா...!!!

என்னை நினைத்ததால்
நீ என் நினைவா...!!!

நான் இங்கு கற்றுக்கொண்டேன்...
உன்னை மட்டுமல்ல இந்த உலகையும்...

எல்லோரும் நல்லவர்கள்
அவர்கள் நம்மிடம் எதிர்பார்க்கும்வரை....

நாம் எல்லோருக்கும் நல்லவர்கள்
அவர்கள் எதிர்பார்ப்பதை நாம்
கொடுக்கும் வரை...

தொலைகின்ற பொருளை
தொலைத்து விட்டு செல்கிறேன்...

மீண்டும் வருவேனோ தெரியாது
வந்தால் மீண்டு வருவேன்...

பேருந்து போன்ற என் வாழ்கையில்
மற்றுமொரு வழித்தடத்திலிருந்து
புறப்படுகிறேன்...
இருப்பவர்கள் எப்படியோ,
இறங்கியவர்களாவது
மகிழ்ச்சியுடன் செல்லட்டும்...

நானும் செய்து விட்டேன்
அது தப்போ தவறோ
தெரியவில்லை...