Monday, February 14, 2011

டாடி

என்னை
யார்யாரோ
டா போட்டுக்
கூப்பிடுகிறார்கள்
உன்னைத் தவிர....

நான்
யாரையும்
டி போட்டுக்
கூப்பிடுவதில்லை
உனக்காக.....

காதலர் தினம்

உனக்கான
என் காதல்
இன்னும் என்னிடமே
உள்ளது
இந்த காதலர் தினத்திலும்...

அதை
உன்னிடம் சேர்க்கும்
காலம் வரும்...
அதுவரை காத்திருப்பேன்
உன் கனவுகளோடு....