Saturday, December 7, 2013

காமம்


நீ கொண்ட காமத்தை
பெண்மைக்கே உரித்தாய்
உன் கண்ணோடு 
மறைக்கின்றாய்...

உன் கை  இழுத்து
இடை வளைத்து
என் மடி அமர்த்தி
உன் கண்ணோடு
நீ சொல்லாத காமத்தை
வெளிகொணராமல்
நான் கொண்ட காதலை
வெளியேற்றுவேனோ....

Tuesday, November 5, 2013

தேர்வு

உன்னை நான்
தேர்ந்தெடுக்கவில்லை...

என்னை நீ
தேர்ந்தெடுக்கவில்லை...

நம்மை காதல்
தேர்ந்தெடுத்தது....

Thursday, August 1, 2013

அவ தானிப்பு

என்னைப் போன்ற
கிறுக்கன்களுக்கு
மட்டுமே தெரியும்

எப்பொழுதும் உன்னைப் பற்றி
நினைத்து மட்டுமே கொண்டிருப்பது
எத்துணை சிரமமானது என்று...

Sunday, July 28, 2013

மிட்டாய்க்காரி

மிட்டாயில் கடிகாரம் செய்து
கையில் கட்டும் வரையிலும்

மீசை செய்து மேல் உதட்டில்
ஓட்டும் வரையிலும்

வாய் பிளந்து
இமைக்க மறந்து
ஜவ்வு மிட்டாய்க்காரனை
வேடிக்கைப் பார்க்கும்
சிறாரைப் போன்று
வேடிக்கைப் பார்க்கிறேன் உன்னை....
நீ ஒவ்வொரு முறையும்
சேலை கட்டுகையில்...

கடைசியாக அவன்
கன்னத்தில் ஓட்டும்
பிசிருக்காக காத்திருந்ததைப் போல
புளங்காகிதம் அடைகிறேன்
நீ கட்டி முடித்து
என் தலையில்
கொட்டுகையில்...!!!!

Monday, July 22, 2013

பிறப்பு

பிறப்பவை அனைத்துமே
காதலினாலே பிறக்கின்றன...
நீயும்
நானும்
நம் காதலும் கூட...

Sunday, July 21, 2013

அரிது



வெள்ளி முளைக்கும்
அந்தி வானமும்
கள்ளி உனது
கள்ளப் பார்வையும்
காண்பதரிது...

Wednesday, July 17, 2013

கா(த)ல் தடம்

குளித்து முடித்து
என்னைத் தாண்டி
செல்லும் வேளைகளில்
உன்னைக் காட்டிக்கொடுத்து விடும்
உன் கால் தடம் அது என்
காதல் தடம்.....

Friday, May 10, 2013

மழை

மழை பெரிதாய்
பெய்துக்கொண்டிருக்கிறது...

கதவை தாளிட்டுக்கொண்டு
உள்ளே ஜன்னல் வழிய
மழையை ரசித்துக்கொண்டிருக்கிறாய்....

நன்றாக நனைந்த நான்
வெளியில் நின்று
கையசைக்கின்றேன்...
பார்த்துக்கொண்டே
நிற்கிறாய்....

உன் பெயர் சொல்லி
அழைக்கின்றேன்...

"போடா... உனக்கு வேறு வேலையே
இல்லை... கதவைத் திறந்தால்
மறைந்து போகிறாய்..
இத்தோடு பதினான்காம் முறை"
என்று செல்லமாய்
சிணுங்கினாய்...

நீ மழையை
ரசித்துக்கொண்டிருக்கிறாய்...
நான் உன்னை....

மழை நின்றுவிட்டது ..
இப்போது தான்
கவனிக்கின்றாய்
நான் நிற்ப்பதை...

"லூசாடா நீ" என்ற
திட்டிக்கொண்டே
சேலைத் தலைப்பால்
தலையை துவட்ட
ஆரம்பித்தாய் ...

நான் நனைய
ஆரம்பித்தேன்...

Monday, May 6, 2013

தேடல்

தேடல் தான்
வாழ்க்கை என்று
புரிந்துகொண்டேன்
உன்னைத் தேட
தொடங்கியதிலிருந்து.....

Friday, May 3, 2013

குளிர்

"உங்க ஊர்ல கூட வெயில் 
ரொம்ப அடிக்குதாமே " என்று கேட்டாள்.

"ஆமா... நீ இல்லாததால அதுக்கு
குளிர் விட்டுப்போச்சு" என்றேன்...

எனக்கு மட்டுமான ஒரு குளிர் பிரதேசத்தை
ஒற்றைப் பார்வையில் வீசிச்சென்றாள்.

Monday, March 18, 2013

கண்ணாடி

தினமும் பார்த்தாலும்
திரும்பப்  திரும்பப் பார்க்கிறேன்...
உன்னை எங்கேனும்
ஒளித்து வைத்துள்ளதா என்று
நீ உன் அழகுகளைக் கொட்டிச்சென்ற
என் வீட்டுக் கண்ணாடியில்..

Friday, March 8, 2013

காதல் மொழி


காதலை வெளிப்படுத்துவதில்
உனக்கும் எனக்கும்
ஒரே ஒரு வித்தியாசம்தான்...

எனக்குக் கவிதை...
உனக்கு வெட்கம்...

ஆனாலும் உன்னை வெல்ல
முயன்று ஒவ்வொரு முறையும்
தோற்கிறேன் உன் வெட்கத்தில்.... 

Thursday, February 14, 2013

காதலர் தினம்

கைப்பிடித்து நடக்க
காத்திருக்கிறேன்
உன் காதலுடன்...

Friday, February 8, 2013

பகல் - இரவு

ஒவ்வொரு  காலையும்
தொடங்குகிறது
உந்தன் கனவுகளோடு....

ஒவ்வொரு இரவும்
முடிகிறது
உந்தன் நினைவுகளோடு....

Tuesday, February 5, 2013

வீடு

காதலும்
காதல் சார்ந்த இடமும்
நம் வீடு...

Tuesday, January 29, 2013

புத்தாண்டு

இருபத்தியொன்று கழிந்தால்
உன்னைக் காண முடியாதென்று
நினைத்திருந்தேன்...
இன்னும் உள்ளது
வாழ்க்கை என்று
இழுத்து வந்துவிட்டது
இந்த புத்தாண்டு...