Wednesday, December 12, 2012

சிரிப்பூ

எந்தப் பூவும்
இத்தனை
அழகாய்
சிரிப்பதில்லை
உன்னைத் தவிர...

Friday, December 7, 2012

ஒரு கோப்பைக் காதல்

ஒரு கோப்பைக் காதல்
நம்முடையது ..
அக்கோப்பையே
இவ்வுலகமாயின்...!!!!

Saturday, December 1, 2012

படைப்பு

எல்லாருக்காகவும்
யாரோ ஒருவர் எங்கோ
படைக்கப்படுகிறார்கள் ...
எனக்கு மட்டும்
தேவதையாக ... !!!

Monday, November 26, 2012

கவிதை

மூன்று வார்த்தைகளில்
ஒரு கவிதை
சொல்லமுடியுமா
என்றாய்...

"நீ
நான்
காதல்"
என்றேன்
வியந்து பார்க்கிறாய்...

இது என்ன பிரமாதம்
ஒரு வார்தையில்கூட
கவிதை சொல்வேன்
"நாம்"
என்று...

Thursday, November 8, 2012

வெட்கம்

கைக்குட்டை போல்
கண்ணோடு வைத்திருக்கும
உன் வெட்கத்தை இன்றாவது
சிறை பிடித்திட எண்ணினேன்...
கள்ளச்சிரிப்பை விடுத்து
உதிர்த்த வெட்கத்தை
அள்ளிச்சென்றாய்
வழக்கம்போல் ...

Tuesday, October 16, 2012

நீ

தேவதையாய்
பிறந்து
ராட்சசியாய்
இருப்பவள் நீ...
என் அழகு ராட்சசி...!!!

Friday, September 28, 2012

நீ எங்கேயோ இருக்கிறாய்

எட்டிப்பார்த்து
இம்சிக்கிறாய்

திரும்பிப்பார்த்து
தவிக்கவிடுகிறாய்

கடந்துசென்று
கொல்கிறாய்

சிறு புன்னைகையில்
சிதறடிக்கிறாய்

கண் அசைவில்
கலவரம் செய்கின்றாய்

இவ்வனைத்தையும்
எங்கிருந்தோ செய்யும்
வித்தையை
எங்கிருந்து கற்றாய்...

நீ எங்கேயோ
இருக்கிறாய்..

Wednesday, September 26, 2012

வாழ்க்கை

சொந்த ஊருக்கு செல்வதிலேயும்
சென்று வந்தபின்
திரும்ப செல்லும் நாட்களை
கணக்கிடுவதிலேயும்
கழிந்துவிடுகின்றன
வாழ்க்கை...!!!

ஆனாலும்
பேருந்தோ புகைவண்டியோ
பிடிக்க ஓடும் தருணங்களிலும்
திரும்பும் வேளையிலும்
தொண்டையில் ஏற்படும்
சொல்ல முடியாத சோகத்திலும்
கண்ணோரம் வழியும் கண்ணீரிலும்
உணர்கிறேன் வாழ்க்கையின்
ஆனந்தங்களை....!!!

Thursday, September 20, 2012

நினைவுகள்

நண்பன் வந்து
தோளைத் தட்டியே பின்பே
தெரிகிறது...
நான் பேசிக்கொண்டிருப்பது
உன்னுடன் அல்ல
உன் நினைவுகளுடன் என்று...

Tuesday, August 21, 2012

கனவு

நீயோ
கனவாகவே
இருக்கின்றாய்...
ஆனால் எந்த கனவும்
உன்போல்
இனிமையாய்
இருப்பதில்லை....

Friday, August 10, 2012

மொழி பெயர்ப்பு

எந்த மொழியையும் மாற்றம்
செய்யும் கூகிள் கூட
வெட்கி தலை குனிகிறது
உன் மௌன மொழியை
பெயர்க்க முடியாமல்...

வெளிநடப்பு

உன்னைப்பற்றிய சிந்தனைகளை
வெளியே வைத்துவிட்டு
உன்னைப்பற்றி ஒரு கவிதை
எழுத நினைக்கின்றேன்...
ஆனால் வார்த்தைகளோ
உனக்காக வெளிநடப்பு செய்கின்றன...

Thursday, August 9, 2012

உலகம்

உலகத்தின் அத்தனை
ஓரங்களிலும்
ஓடிச் சென்று பார்க்கிறேன்
எங்கும் நீயே நிற்கிறாய்....
பிறகுதான் புரிந்தது
உன்னையே
சுற்றிக்கொண்டிருக்கிறேன் என்று....

Monday, June 11, 2012

பரிசு

எனக்கான எந்தப் பரிசும்
உயர்வாய் இருந்துவிடப்
போவதில்லை
உன்னை விட...

காதல் குறள்

கற்க கசடற
என்கிறது குறள்
கற்க கடைசிவரை
என்கிறது காதல்

Monday, May 14, 2012

என் மனம்

உற்றோக்கன்றி உரியோரிடம்
சேரும் மடந்தை போன்றது
என் மனது
என்றுமே உனக்கானது...

உறவு

உறவு என்கின்ற உணர்வு
உதிரத்தில் கலக்காதவரை
பாசம் என்பது
நியாயவிலைக்கடை பொருளின்
எடை போன்றது தான்....

வாழ்க்கை

கொஞ்சம் நீ
கொஞ்சம் நான்
நிறைய காதல்
கலந்து செய்தது
நம் வாழ்க்கை...

Friday, April 27, 2012

கொஞ்சல்

உனைப் பார்த்ததும்
ஓடி வரும்
இரண்டு உயிர்களுள்
ஒன்றை மட்டும்
எடுத்து கொஞ்சுகிறாய்...

அடுத்த முறையாவது
உன் நாய்க் குட்டியை விடுத்து
என் காதலை எடுத்துக்கொள்

நீ

தனிமையான இரவுகள்
தனியாக கழிவதில்லை
என்னுடன் நீ

Tuesday, April 17, 2012

தேவதை

தேவதைகள் தனியே
பூமிக்கு வருவதில்லை
உன்னைத் தவிர....

Tuesday, February 14, 2012

நீ

நீ
என் கனவு
உன் நினைவுகளோ
என் வாழ்க்கை

கொண்டாட்டம்

வேலன்டைன்க்குத் தெரியாது
காதல் தினம் கொண்டாடப்படும் என்று...

ஷாஜகானுக்குத் தெரியாது
தாஜ்மஹால் காதல் சின்னமாகக்
கொண்டாடப்படும் என்று...

உனக்குத் தெரியாது
உன்னை நான் எப்படிக்
கொண்டாடுவேன் என்று...