Thursday, July 28, 2011

கூந்தல்

காற்றினிலே குதித்தாடும்
உன் கூந்தலை நீ சரிசெய்கையில்
சொல்பேச்சு கேட்பதுபோல்
நடிக்கும் குழந்தை மாதிரி
உன் கைகளில் அடங்கி பின்னர்
தாவிக் குதித்து விளையாடும்..

நீங்கள் இருவரும் விளையாடும் இந்த
விளையாட்டை பார்த்துக்கொண்டே இருக்கலாம்...

ஆனால் நீ அதை அள்ளி முடிகையில்
அடிபட்ட குழந்தை போல்
அடங்கிப் போவது உன் கூந்தல் மட்டும்மல்ல
என் மனமும் கூட...