Sunday, December 6, 2009

இழப்பு

கையிலிருந்து பறக்கும்
பலூனுக்குத் தெரியாது
குழந்தையின் தவிப்பு...

பிழை

மனிதப் பிழையின்
முடிவு
மனப்பிழை...

Monday, November 30, 2009

நாய்க்குட்டி

எத்தனை முறை எட்டி உதைத்தாலும்
காலை சுற்றிச் சுற்றி வருகிறது
சிறு ரொட்டித் துண்டிற்காக...

நான்

நானும் செய்துவிட்டேன்
அது தப்போ தவறோ
தெரியவில்லை...

என்னை தோண்டியும்
அறிய முடியவில்லை...

அழும் குழந்தையிடம்
இருந்து பிரிந்து செல்கிறேன்...
அதனிடம் இருந்த என்
பொருளை பறித்து செல்கிறேன்...

என்னை அறிந்தேனா,
என்னை உணர்ந்தேனா,
தெரியவில்லை....

நான் சிரித்தேன்,
நீ அழக்கூடதிருக்க....

என்னை அழ வைக்கிறேன்,
உன்னை சிரிக்க வைக்க....

உன்னை சுமந்ததால்
நான் உனக்கு தாயா...!!!

என்னை நினைத்ததால்
நீ என் நினைவா...!!!

நான் இங்கு கற்றுக்கொண்டேன்...
உன்னை மட்டுமல்ல இந்த உலகையும்...

எல்லோரும் நல்லவர்கள்
அவர்கள் நம்மிடம் எதிர்பார்க்கும்வரை....

நாம் எல்லோருக்கும் நல்லவர்கள்
அவர்கள் எதிர்பார்ப்பதை நாம்
கொடுக்கும் வரை...

தொலைகின்ற பொருளை
தொலைத்து விட்டு செல்கிறேன்...

மீண்டும் வருவேனோ தெரியாது
வந்தால் மீண்டு வருவேன்...

பேருந்து போன்ற என் வாழ்கையில்
மற்றுமொரு வழித்தடத்திலிருந்து
புறப்படுகிறேன்...
இருப்பவர்கள் எப்படியோ,
இறங்கியவர்களாவது
மகிழ்ச்சியுடன் செல்லட்டும்...

நானும் செய்து விட்டேன்
அது தப்போ தவறோ
தெரியவில்லை...

Thursday, September 3, 2009

தமிழன்

வந்தோரை வாழ வைக்கும்
தமிழனுக்கு
தான் வாழ வழியில்லை.

விருந்தோம்பலை உயர்வாய்
நினைத்தவனுக்கு
மருந்துக்கு கூட உணவில்லை.

தன்மானத் தமிழனுக்கு
தன் மானமும் தெரியவில்லை
தமிழ் மானமும் தெரியவில்லை.

அள்ளிக் கொடுத்தவனுக்கு
கிள்ளிக் கொடுக்கூட
ஆளில்லை...

தமிழன் என்றோ
டமிலன் ஆகிவிட்டான்...

பழந்தமிழன்
பகடைக்காயாய்
உருட்டப்படுகிறான்...

பாவப்படவனுக்கு
பரிதாபப்பட
யாரவது உள்ளார்களா?

ஆசை

எல்லோரும்
மழையில் நனைய
ஆசைப்படுவார்கள்.
மழையோ
உன் மேல் நனைய
ஆசைப்படுகிறதே!!!

முத்து

மழைத்துளியின் ஒரு துளி
சிப்பிக்குள் நுழைந்து
முத்து ஆகிறதாம்...
இங்கு ஒரு முத்தே
மழையில் நனைகிறது...
ஒவ்வொரு துளியும்
உன் உறவினர்களா?!!!

மழையானவள்

எதிர்பார்த்து
காத்திருக்கும் என்னை
எதிர்பாராமல் குளிர்விக்கிறாள்....
என்னவள் மழையானவள்!!!

Monday, June 22, 2009

முகமூடி


அறை முழுவதும் அலசிப் பார்த்தும்
ஆயிரம் ஆயிரம் துருவிப் பார்த்தும்
சரியான முகமூடி கிடைக்கவில்லை
சராசரி மனிதனுக்கு......

அநாதை

அ - அம்மா
கற்பித்தார் ஆசிரியர்
அம்மா என்றால் என்ன?
யோசித்தது அநாதை குழந்தை.....

Thursday, May 28, 2009

சொந்தம்

ஆறடி நிலமே சொந்தம்
புதைக்கப்படுபவனுக்கு

அதுகூட சொந்தமில்லை
எரிக்கப்படுபவனுக்கு...!

கானல் நீர்

தொடுவானம் தொடத் துடிக்கும்
குழந்தைபோல்
உன்னைத்தேடி நான்.... கானல் நீர்

நிலவு

அதிகாலை காலையாக மாறத்
துடித்துக் கொண்டிருக்கிறது
கதிரவன் தன் ஒளிக்கதிர்களை
நீட்டி தன் வரவை வெளிப்படுத்தி
கொண்டிருகிறான்....

அதுவரை ஆட்சி செய்து
கொண்டிருந்த நிலவு மகள் தன்னுள்
மயங்க யாருமில்லததால்
காற்றிலே கரைகிறாள்
மனவருத்தத்துடன்
என்னைபோல்.....

ஹைக்கூ

புல்லுக்கும் வியர்க்குமோ
புல்லின் நுனியில்
நீர்த்துழிகள்...!

Thursday, March 19, 2009

தலைஎழுத்து

எனது முறை வந்தபோது
இறைவன் குழந்தையாய்
மாறிவிட்டான் போலும்....
இடதுகையால் எழுதி இல்லை
கிறுக்கிவிட்டான் ....

பிச்சை

தவறு என்பது
மனதிற்கு மட்டுமே
தெரிந்த ஒன்று ...
வயிற்றுக்கு அல்ல !

நிலவு


பல விளக்குகள்
ஒளித்துக் கொண்டிருக்கின்றன
அகல் விளக்காய்.....
நீயோ ஒரு விளக்கை
மயக்கிக் கொண்டிருக்கிறாய்....

நட்பு

நெருங்கும் போது
மறையும்
கானல் நீரல்ல நட்பு...
அது ஆர்பரிக்கும் கடல் !!!

மழை



வருகிறா
ய்
என்று ண்ணியபோது
வாரிச் சென்றான்
மரண தேவன்